செய்தி தமிழன்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனி முஸ்லிம் வேட்பாளராக களமிறங்க முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் உத்தேசித்துள்ளதாக அறியமுடிந்தது.
அண்மைக்காலமாக முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளை உலகத்திற்கு ஓரணியில் நின்று எடுத்துச் சொல்லவும் – இரு பிரதான கட்சிகளின் மீதான முஸ்லிம் மக்களின் நம்பிக்கையின்மையை பகிரங்கமாக வெளிப்படுத்தவும் இவ்வாறு அவர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரியவந்தது.
இதன் உண்மைத்தன்மை குறித்து அவரிடமே நேரடியாக கேட்டது தமிழன் செய்திச் சேவை…
“ தேர்தலில் போட்டியிட பல்வேறு மட்டங்களில் இருந்து எனக்கு அழைப்பு வருகிறது.பலர் ஆலோசனைகளை சொல்கிறார்கள். அறிவுரை வழங்குகின்றனர்.நேரம் வரும்போது தீர்மானிப்பேன்.
என்றார் ஹிஸ்புல்லாஹ்