முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.
முன்னாள் இராணுவ தளபதியின் சிறந்த சேவைகளை ஜனாதிபதி அவர்கள் பாராட்டியதுடன், சுமுகமாக கலந்துரையாடினார்.
முன்னாள் இராணுவ தளபதியினால் ஜனாதிபதி அவர்களுக்கு இதன்போது நினைவுச் சின்னமொன்று வழங்கப்பட்டது.