ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுஉண்மையிலேயே இரத்து செய்யப்பட்டதா கோட்டாவின் அமெரிக்க குடியுரிமை?

உண்மையிலேயே இரத்து செய்யப்பட்டதா கோட்டாவின் அமெரிக்க குடியுரிமை?

0Shares

அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்தவர்களின், புதிய பட்டியலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்வின் பெயர் இடம்பெறவில்லை.

இந்நிலையில், அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருட இறுதியில் நடைபெறலாம் என எதிர்ப்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில்,பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில்  பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் அமெரிக்க பிரஜை என்பதால், அவரால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டலாம் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவிற்குச் சென்ற கோட்டபாய ராபஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்வதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில்,கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்வது தொடர்பிலான பணிகளுக்காக அவர் அமெரிக்கா சென்றிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்ததோடு, அவர் அமெரிக்கா சென்ற விடயத்தை உறுதிப்படுத்தும் புகைப்படங்களும் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்தமைக்கான ஆவணம் என்ற ஒன்றை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

இந்த விடயத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், கோட்டாபயவின் சகோதரருமான பெசில் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

எவ்வாறெனினும், 2019ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டின், மார்ச் முதலாந் திகதி தொடக்கம், ஜூன் 30 வரையான காலப்பகுதியில் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்தவர்களின், பட்டியல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க கூட்டாட்சி பதிவு அலுவலகம் வெளியிட்டுள்ளஇந்த உத்தியோகபூர்வ பட்டியலில், கோட்டாபய ராஜபக்சவின் பெயர் இடம்பெறவில்லை.

தனது அமெரிக்க குடியுரிமையை மே 3ஆம் திகதி அமெரிக்க அரசாங்கம் இரத்து செய்துள்ளதாகவும், ஏப்ரல் 17ஆம் திகதியில் இருந்து, தான் அமெரிக்க குடியுரிமையை இழப்பதாகவும், கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்ததோடு, அதற்கான ஆவணம் தன்னிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், அமெரிக்க கூட்டாட்சி பதிவு அலுவலகம் வெளியிட்ட, முதலாவது காலாண்டுக்கான அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்தவர்களின், பட்டியலில்,கோட்டாபய ராஜபக்சவின் பெயர் இடம்பெறவில்லை.

இரண்டாவது காலாண்டுக்கான பட்டியலில் அவரது பெயர் இடம்பெறும் என்றும் கூறப்பட்டது.

எனினும், அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்தவர்கள் தொடர்பிலான இரண்டாவது காலாண்டுக்கான 17 பக்கங்களைக் கொண்ட பட்டியலில், கோட்டாபய ராஜபக்சவின் பெயர் இடம்பெறவில்லை.

ஆகவே, கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமை கொண்டவராகவே கணிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments