ஜனாதிபதி வேட்பாளர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஐக்கிய கட்சித் தலைமை கேட்டால், தாம் ஒப்புக்கொள்வார் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறுகிறார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பொன்சேகா, நாட்டின் பொறுப்பை ஏற்கும் திறன் தனக்கு இருப்பதாக தெரிவித்தார்.
” ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் நான் நாட்டை கட்டியெழுப்ப்புவேன் .ஆனால் மாடமாளிகைகள் அல்லது முதல் பெண்மணியை உருவாக்கமாட்டேன்” என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
கோட்டபய ராஜபக்ஷ நாட்டின் பாதுகாப்புக்கு சிறந்த மனிதர் என்றும், நாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்தால், கட்சியில் தம்மைத்தவிர அதற்கு உகந்தவர் வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார்