அநுராதபுரத்தில் அமைந்துள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு அவர்களது காதலர்களால் ஆபாச வீடியோ காட்சிகள் கைப் பேசிகளில் பதிவேற்றப்பட்டு பரிசாக வழங்கப்பட்ட பல சம்பவங்கள் நடந்துள்ளதாக ஆசிரியர்கள் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
அதி நவீன கைத்தொலைப் பேசிகளிலில் மாணவிகள் சிலரிடமிருந்து ஆபாச வீடியோ காட்சிகளை கண்டதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மாணவிகளிடம் இது குறித்த விசாரித்த போது தங்களது காதலர்கள் தங்களுக்கு பரிசலித்த கைத் தொலைபேசிகளில் அந்த வீடியோ காட்சிகள் பதிவேற்றப்பட்டிருந்ததாக ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து குறித்த மாணவிகளையும் மாணவிகளது காதலர்களையும் அவர்களது பெற்றோரையும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் கடும் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரவிக்கின்றனர்.