ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண சில அரசியல் கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணியை அமைத்துள்ளது.
குறித்த கூட்டணிக்காக அரசியல் கட்சிகளுக்கிடையில் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.குறித்த ஒப்பந்தம் சற்று முன்னர் எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் வாசஸ்தளத்தில் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத – இதுவரை கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்காத 10 அரசியல் கட்சிகள் இன்று காலை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
- 01. ஹேமகுமார நாணயக்கார – மௌபிம ஜனதா கட்சி.
- 02. சதாசிவம் – இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி.
- 03. கமல் நிசங்க – லிபரல் கட்சி
- 04. சரத் மனமேந்திர – புதிய சிஹல உறுமய
- 05. அருண டி சொய்சா – ஜனநாயக தேசிய அமைப்பு
- 06. விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) – தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி
- 07. சரத் விஜேரத்ன – பூமிபுத்திர கட்சி
- 08. ஜயந்த குலதுங்க – எக்சத் லங்கா மகா சபை
- 09. எஸ் ஜே. துஷ்யந்தன் – ஈழவர் ஜனநாயக முன்னணி
- 10. முபாரக் அப்துல் மஜிஸ் – முஸ்லிம் உலமா கட்சி