முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான முதற்கட்டமாக அமெரிக்க குடியுரிமையை துறக்கும் பணிகளை பூர்த்தி செய்துள்ளார்.
அமெரிக்க குடியுரிமை நீங்கியதற்கான ஆவணங்களை பெரும்பாலும் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் கோட்டாபய பகிரங்கமாக வெளியிடவுள்ளார்.
கோட்டாபயவின் குடியுரிமை நீக்கத்திற்கு அனுமதியை வழங்கியுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் , அவரது அமெரிக்க கடவுச் சீட்டை இரத்துச் செய்யும் நடவடிக்கைகளை ஏற்கனவெ எடுத்துள்ளது.
முன்னதாக கடந்த மாதம் சிங்கப்பூருக்கு சென்ற கோட்டாபய இலங்கை பாஸ்போர்ட்டுடன் சென்றிருந்தார்.
அமெரிக்க குடியுரிமை நீக்கம் தொடர்பான மே மாதம் வெளிவந்த பட்டியலில் கோட்டாவின் பெயர் இல்லையென சில செய்திகள் முன்னதாக வெளிவந்திருந்தன .ஆனால் அது காலாண்டுக்கு ஒருமுறை வெளியாகும் பட்டியல் என்பதால் அடுத்த பட்டியலில் அவரின் பெயர் இருக்குமென இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
செய்தி உதவி தமிழன் செய்திச்சேவை