சீதுவை – குஸ்வல வீதியில் ஹெரோயினுடன் நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் தங்கியிருந்த வீட்டில் இருந்து மேலும் ஹெரோயின் தொகையொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
521 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் , பின்னர் அவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் தங்கியிருந்த வீட்டில் சோதனையிடப்பட்டது.
இதன்போது , ஒரு கிலோ 507 கிராம் ஹெரோயின் தொகையும் , 12 கிலோ 776 கிராம் கஞ்சா போதைப்பொருளும் , 500 போதை மருந்துகளும் மற்றும் துப்பாக்கியொன்றுடன் 7 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறை ஊகட பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்த ஹெரோயின் தொகையின் பெறுமதி இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.