லண்டன்:நடப்பு உலக கோப்பை போட்டியில் மீண்டும் ஹாட்ரிக் எடுக்க முடியும் என்று இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா கூறியிருக்கிறார்.
இலங்கை அணின் அனுபவ பந்துவீச்சாளர் மலிங்கா. உலக கோப்பையில் இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால், சக நாட்டு வீரரான ஜெயசூர்யாவுக்கு இணையான ஒருநாள் விக்கெட் வீழ்த்தியவர் எனும் பெருமையை பெறுவார். 2007-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த உலக கோப்பை போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 4 பந்துகளில் 4 விக்கெட்டை மலிங்கா வீழ்த்தினார். அதுபோன்ற சாதனையை இந்த உலக கோப்பையிலும் படைப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.