தகவல் பரிமாற்று செயலியான வட்சப் ஊடாக கண்காணிப்பு தீம்பொருட்களை கைப்பேசி மற்றும் கணினிகளில் பதிவிடுவதற்கான வழிமுறை ஒன்றை ஹெக்கர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனால் 1.5 பில்லியன் எண்ணிக்கையான வட்சப் பாவனையாளர்களும், தங்களது செயலியை புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மிகவும் நிபுணத்துவம் பெற்ற இணைய ஹெக்கர்களால் இந்த பொறிமுறை வடிவமைக்கப்பட்டுள்ளதாக, வட்சப் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த அபாயத்தை தவிர்ப்பதற்காக புதுப்பிக்கப்பட்ட செயலி தற்போது தரவேற்றப்பட்டுள்ள நிலையில், பயனாளிகள் தங்களது செயலிகளை புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.