முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
எனினும் நானே நாட்டின் பிரதமர் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சட்டத்திற்கு விரோதமான முறையில் மஹிந்த பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ரணில் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசியலமைப்பு நடைமுறைகளை மீறி மஹிந்தவை பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மஹிந்தவுக்கு அவ்வாறு பிரதமர் பதவி வழங்க முடியாது. அது சட்டவிரோத செயல் என ரணில் சுட்டிக்காட்டியள்ளார்
நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை நிரூபித்து காட்டுவேன் என ரணில் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.