எதிர் காலத்தில் அரிசி விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட உள்ளது.
வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு நேற்றுமுன்தினம் நடத்திய கூட்டத்தில் கட்டுப்பாட்டு விலை பற்றி தீர்மானம் எட்டப்பட்டது.
இதன் பிரகாரம் ஒரு கிலோ சம்பா 108 ரூபாவுக்கும், ஒரு கிலோ நாட்டரிசி 88 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும். எந்தத் தினத்திலிருந்து கட்டுப்பாட்டு விலையை அமுலாக்குவது என்பது பற்றி விரைவில் தீர்மானிக்கப்பட உள்ளது.
அதேவேளை, இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான வரியையும் 15 ரூபாவால் அதிகரிப்பதென வாழ்க்கைச் செலவுக்குழு தீர்மானித்துள்ளது. இந்தத் தீர்மானம் இரு வாரங்களுக்குள் அமுலாக்கப்படும். இதன் மூலம் சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என வாழ்க்கைச் செலவுக் குழு அறிவித்துள்ளது.