நாம் உற்பத்தி செய்வோம், நாம் உண்போம் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் விவசாய உற்பத்தி வலயம் அந்தந்த பிரதேசங்களில் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திகளை அடையாளம் கண்டு அதற்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு அமைவாக விவசாய உற்பத்தி பயிர் வலயத்திற்கான வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்படும் முதலாவது வலயமாக மாம்பழ அபிவிருத்தி வலயம் அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள மாம்பழ உற்பத்தி வலயம் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
விவசாய அமைச்சு உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தும் விவசாய நவீன திட்டத்தின் கீழ் இந்த மாம்பழ உற்பத்தி வலயம் அமைக்கப்படுகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் சிறந்த ரக ஒரு லட்ச மாம்பழக் கன்றுகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன.