முச்சக்கர வண்டி சாரதிகளின் வயதெல்லை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தற்போதுள்ள சாரதிகளை பாதிக்காது என போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டியை செலுத்தும் சாரதிகள் 35 முதல் 70 வயதிற்கு உட்பட்டவர்களாக மாத்திரம் இருக்க வேண்டும் என கடந்த வாரம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், குறித்த வயதெல்லை கட்டுப்பாடு தொடர்பில் போக்குவரத்து அமைச்சால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.