ColourMedia
WhatsApp Channel
Homeவெளிநாட்டுசிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும்; குற்றவாளிகளுக்கு இந்தியாவில் மரண தண்டனை

சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும்; குற்றவாளிகளுக்கு இந்தியாவில் மரண தண்டனை

0Shares

பன்னிரெண்டு வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும்; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்ட திருத்தம் இந்திய பாராளுமன்றத்தில் நேற்று திங்கள்கிழமை நிறைவேற்றப்ட்டுள்ளது.
இந்தியாவின் ஜம்முகாஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் 12 வயது சிறுமியும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தில் இளம் பெண் ஒருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவங்கள் நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கான பிரேரணை குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறியது. இதற்கு, அரசியல் வேறுபாடுகள் இன்றி அனைத்துக் கட்சிகளும் ஆதரவளித்தன.

விவாதத்திற்கு உரையாற்றிய இந்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கோடு இதுபோன்று கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. இந்திய தண்டனையியல் சட்டத்தின் முந்தைய பிரிவுகளில், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கே தண்டனைகள் இருந்தது.
ஆனால், 12 அல்லது 16 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை, கூட்டு வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கான தண்டனை விதிகள் இருந்ததில்லை. தற்போது அரசாங்கம் கொண்டுவந்துள்ளது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சட்ட விதிகளாகும்.
நாட்டில் சமீபத்தில் 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவங்கள் மக்களின் மனதை உலுக்கின. இதையடுத்து 12 – 16 வயதுக்குள்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, கூட்டு வன்கொடுமை சம்பவங்களைத் தடுக்க மிகக் கடுமையான தண்டனைகளுடன் கூடிய சட்ட விதிகளை உருவாக்க தேவையேற்பட்டது.
இந்தச் சட்ட மசோதா, 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வகை செய்கிறது.
ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் வழக்கில், குறைந்தபட்ச தண்டனைக் காலம் 7 ஆண்டு சிறையில் இருந்து, 10 ஆண்டு சிறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த சிறைத் தண்டனையை ஆயுள் சிறையாக நீட்டிக்கவும் இயலும் என்று தெரிவித்தார்.
தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள குற்றவியல் சட்ட திருத்தம் 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும். குறைந்தபட்சமாக 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படலாம். மேலும் அது ஆயுள் சிறையாகவும் நீட்டிக்கப்படலாம்.
16 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், குறைந்தபட்ச தண்டனையானது 10 ஆண்டு சிறையிலிருந்து, 20 ஆண்டு சிறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதை ஆயுள் சிறையாக நீட்டிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து வகையான பாலியல் வன்கொடுமை வழக்குகளின் விசாரணை கட்டாயமாக 2 மாதங்களுக்குள்ளாக முடிக்கப்பட வேண்டும்.
அதேபோல், மேல்முறையீடுகள் மீதான விசாரணை 6 மாதங்களுக்குள்ளாக நிறைவு செய்யப்பட வேண்டும். 16 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமை, கூட்டு வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு பிணை வழங்கப்படாது.

அத்தகைய வன்கொடுமை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் பிணை மனுக்கள் மீது உத்தரவிடும் முன்பாக, அதன் மீது பதிலளிக்க அரசுத் தரப்பு வழக்குரைஞர் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பிரதிநிதிக்கு நீதிமன்றம் 15 நாள்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று இந்த திருத்தத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments