1983ஆம் ஆண்டு ஜுலை இனக்கலவரத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைவுக்கூறும் உலகளாவிய தமிழ் மக்களுடன் தாமும் இணைந்துக் கொள்வதாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜுலையின் 35வதும் வருட நிறைவை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
கறுப்பு ஜுலை கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனடா அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.
அத்துடன் அவர்களுக்கான அத்துமான பொறுப்புக்கூறல், மறுசீரமைப்பு, நீதி வழங்கல் விடயங்களில் கனடா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்த்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.