யுக்ரெயின் எல்லையை சட்டவிரோதமாக கடந்த இலங்கை உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யுக்ரெயினின் எல்லை பாதுகாப்பு சேவைப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
போலாந்து – யுக்ரெயின் எல்லைப் பகுதியில் எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் பயணித்த ரஷ்ய மற்றும் அசர்பஜான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இரண்டு பேர் கைதாகி இருந்தனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 5 இலங்கையர்களை அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்தமை தெரியவந்தது.
இதனை அடுத்து மேலும் பலர் கைதாகியுள்ளனர்.
போலாந்தின் எல்லையில் கைதான வெளிநாட்டவர்களும் யுக்ரெயினுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
அவர்களுக்கு எதிராக யுக்ரெனியில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.