ஈ-மெய்ல் மற்றும் பேஸ்புக் ஊடாக வருகின்ற தகவல் ஒன்றின் மூலம் அவற்றின் கடவுச் சொற்களை திருடுகின்ற நடவடிக்கையொன்று இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு கணினி அவசர சேவை சபை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த தகவலை திறப்பதன் மூலம் மீண்டும் கடவு இலக்கம் கோரப்படுகின்ற நிலையில், அதனை பதிவிடுகின்றபோது வேறொரு தரப்பினரால் அந்த கடவுச் சொற்கள் திருடப்படுவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
எனவே முடிந்தளவிற்கு அத்தகைய தகவல்களை திறப்பதை தவிர்க்குமாறு சபை கோரிக்கை விடுத்துள்ளது.