ColourMedia
WhatsApp Channel
Homeவெளிநாட்டுபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசாங்கம்...

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசாங்கம்…

0Shares

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசாங்கம் உறுதியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செய்தியாளர் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் கடம்பூர் ராஜூ இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த ஏழு பேரும் விடுவிக்கப்படுவதற்கு தமிழக அரசாங்கம் எந்தவித எதிர்ப்பையும் வெளியிட போவதில்லை என்றும் அவர் குறிபிபிட்டுள்ளார்.

இதேவேளை, பேரறிவாளனை விடுவிக்க தமக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவரை விடுவிப்பதில் தமது குடும்பத்தினருக்கும் ஆட்சேபனை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ்காந்தியை கொலை செய்வதற்கு, தற்கொலைப் படையினர் பயன்படுத்திய வெடிகுண்டை இயக்குவதற்கான மின்களங்கள் இரண்டை பேரறிவாளனே, பெற்று கொடுத்தார் என கூறி காவற்துறையினர் அவரை 1991ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் திகதி கைது செய்திருந்தனர்.

இந்தநிலையில், அவர் கைது செய்யப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

எனினும் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் கருணை மனுக்கள் மீதான முடிவு எடுக்க 10 ஆண்டுகள் தாமதம் ஆனமையினால் மரண தண்டனை வழங்கப்படக் கூடாது என உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 3 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டனர்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments