ColourMedia
WhatsApp Channel
Homeவெளிநாட்டுபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்

0Shares

உலக சாடுகளில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஓர் ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அந்த ஆய்வை மேற்கொண்ட லண்டனைச் சேர்ந்த தோம்ஸன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை வெளியிட்டுய்ய அறிக்கையில் இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் தொடர்பாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 548 பேரிடம் கடந்த மார்ச் 26 ஆம் தேதி முதல் மே 4-ஆம் தேதி வரை ஆய்வு நடத்தப்பட்டது. இவர்கள் அனைவரும் பெண்கள் தொடர்பான பிரச்னைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.

பாலியல் வன்முறைகள், துன்புறுத்தல்கள், பாலியல் சாராத குற்றங்கள், பெண்ணடிமைத்தனம், பெண்களுக்கு எதிரான கலாசார நடைமுறைகள், ஆள்கடத்தல் உள்ளிட்ட விஷயங்களை முன்வைத்து, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து, உள்நாட்டு போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே மேற்கத்திய நாடு அமெரிக்கா என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டிலும் இதேபோன்ற ஆய்வை தாம்ஸன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை நடத்தியது. அதில், ஆப்கானிஸ்தான் முதலிடத்திலும், காங்கோ குடியரசு, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் இருந்தன. இந்தியா 4-ஆவது இடத்தில் இருந்தது.

இந்த ஆய்வு முடிவுகளை தேசிய மகளிர் ஆணைக்குழு நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ரேகா சர்மா கருத்து தெரிவிக்கையில் , பெண்கள் பொது இடங்களில் பேசக் கூட அனுமதி இல்லாத நாடுகளைவிட குறைவான இடம் இந்தியாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மிக குறைவான பேரிடம்தான் அந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதனை, ஒட்டுமொத்த நாட்டின் நிலவரமாகக் கருத முடியாது’ என்றார்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments