செய்தி:- முஸாதிக் முஜீப்
நீர்கொழும்பு பெரியமுல்லை நலன்புரிச் சங்கத்தினால் மூன்றாவது முறையாக கத்தார் வாழ் நீர்கொழும்பு பெரியமுல்லை மக்களுக்கான ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வு இம் மாதம் வெள்ளிக்கிழமை (01.06.2018)ம் திகதி கத்தாரில் உள்ள இலங்கை உணவகமான லக்மீம உணவகத்தில் நீர்கொழும்பு பெரியமுல்லை நலன்புரிச் சங்கத்தின் கத்தார் கிளையின் தலைவர் எம்.டி.எம் அஸ்மீர் (அம்பி) தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கத்தாரில் வேலைபுரியும் நீர்கொழும்பு பெரியமுல்லை வாழ் மக்கள் 85% ஆனோர் கலந்து கொண்டிருந்தனர். அதுபோல் கத்தாரில் குடும்பமாக வாழும் பெரியமுல்லை மக்களும் தம் குடும்பங்களுடன் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது கொட்டராமுல்ல , நாத்தண்டிய , தும்மோதுர பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கவனம் செலுத்தி ரமழான் மாத நிதி ஒதுக்கீட்டில் நீர்கொழும்பிற்கு வழங்கியது போல் இவர்களுக்கும் ஒரு பகுதி வழங்கப்பட்டது மட்டுமன்றி அவர்களின் கோரிக்கைப் படி பாய்களும், 150 உலர் உணவுப் பொதிகளும் நாத்தன்டிய ஜமியத்துல் உலமா கிளைக்கு கையளிக்கப்பட்டவை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் ஜமியத்துல் உலமா தீர்மானித்திற்கு அமைய, கல்வித்தரம் தொடர்பில் புலமை பரிசில் பரீட்சைக்கான வகுப்புக்கள், உயர்தர மாணவர்களுக்கு வகுப்புக்கள் நடத்துவது தொடர்பிலும் அதற்கான பேச்சு வார்த்தை ஒன்றும் இடம்பெற்றது.
இதுவரை காலத்திலும் இச்சங்கத்தினால் 65 இலட்சம் பெறுமதியான 128 செயற்திட்டங்கள் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனுல் Home pack, Family pack, Emergency pack, Education pack & Ramalan pack முக்கியமானவை.