ColourMedia
WhatsApp Channel
Homeசிறப்புக்கட்டுரைகள்சிதைந்து போகும் சுதந்திரக் கட்சி (சிறப்பு கட்டுரை)

சிதைந்து போகும் சுதந்திரக் கட்சி (சிறப்பு கட்டுரை)

0Shares

பண்­டா­ர­நா­யக்­க­வினால் உரு­வாக்­கப்­பட்ட ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி இப்­போது, மூன்று துண்டுகளாக உடைந்து போய்க் கிடக்­கி­றது.

ஒன்று மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில்- அவ­ரது கட்­டுப்­பாட்டில் இருக்கிறது. இன்நொன்று, மஹிந்த ராஜபக் ஷவின் தலை­மையில் உள்­ளது.

இன்­னொன்று யாரு­டைய தலை­மையில் இருக்­கி­றது என்றே தெரி­ய­வில்லை.

அண்­மையில் அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேறி எதிர்க்­கட்சி வரி­சையில் அமர்ந்து கொண்ட 16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைக் கொண்ட, இந்த மூன்­றா­வது அணி, இரண்டு தலைமைகளையும் ஏற்­றுக்­கொள்­கி­றது. ஆனால் இரண்­டுக்கும் வெளியே நிற்­கி­றது.

மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சியினரைப் பொறுத்தமட்டில், கூட்டு அர­சாங்­கத்தில் நீடித்­தி­ருக்க வேண்டும் என்­பது அவர்­களின் நிலைப்பாடு.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைப் பலப்­ப­டுத்தி, அதனை மீண்டும் ஆட்­சிக்குக் கொண்டு வர வேண்டும் என்ற ஆவல் இவர்­க­ளுக்கு இருந்­தாலும், மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவின் கையில் கட்சி போய் விடக்­கூ­டாது என்­பதில் தெளி­வாக இருக்கிறார்கள்.

அதே­வேளை, மஹிந்த ராஜபக் ஷவின் கீழ் உள்­ள­வர்­களும் மிகத்­தெ­ளி­வான நிலைப்­பாட்டில் இருக்­கி­றார்கள். இனி­வரும் தேர்­தல்­களில் மொட்டு சின்­னத்தில் தான் போட்­டி­யி­டு­வது, மஹிந்த ராஜபக் ஷவின் தலை­மையை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டும் தமக்குப் பின்னால் வரலாம் என்பதில் அவர்கள் உறுதி­யாக இருக்­கின்­றனர்.

அதா­வது, மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் அதி­கா­ரத்­துக்குக் கொண்டு வரு­வது என்ற விடயத்தில் இம்­மி­ய­ளவும் விட்­டுக்­கொ­டுக்க அவர்கள் தயா­ரில்லை.

அது­போ­லவே, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை விட்டு தாம் வெளி­யேறி விட்­ட­தாக மஹிந்த ராஜபக் ஷ இன்னும் அறி­விக்­கா­வி­டினும், அவர் பொது­ஜன பெர­மு­னவைப் பலப்­ப­டுத்­தவே விரும்­பு­கிறார். ஏனென்றால், அதனை மாத்­தி­ரமே அவர் தனது குடும்­பத்தின் சொத்­தாக மாற்றிக் கொள்ள முடியும்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை பண்டா குடும்­பத்துக் கட்சி என்று கூறும் நிலை இப்போதும் உள்ளது. எனவே, அதனைப் பலப்­ப­டுத்தி, கைப்­பற்றிக் கொள்­வதை விட, பொது­ஜன பெரமுனவைப் பலப்­ப­டுத்தி தமது குடும்­பத்தின் கையில் கொடுக்கவே முற்­ப­டு­கிறார் மஹிந்த.

எனவே, மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யுடன் மஹிந்­தவை இணைக்­கின்ற முயற்சி என்­பது குதிரைக் கொம்­பாகத் தான் இருக்கப் போகி­றது.

மூன்­றா­வது தரப்­பான, 16 பேர் கொண்ட அணி இப்­போது, எங்கே இருக்­கி­றது என்பதே கேள்விக் குறி. ஏனென்றால், அர­சாங்­கத்தில் இனி இருக்க முடி­யாது என்று வெளியே வந்து விட்ட இந்த அணி­யினர், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலைமையில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் இருந்து வெளி­யேறத் தயாரில்லை.

அதே­வேளை, மஹிந்த ராஜபக் ஷவை விட்டுக் கொடுக்­கவும் இவர்கள் தயா­ராக இல்லை. இந்த 16 பேரும், கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷவுக்­காக பிர­சாரம் செய்­த­வர்கள் தான்.

மைத்­தி­ரி­பால சிறி­சேன அதி­கா­ரத்­துக்கு வந்த பின்­னரே, அவ­ருடன் ஒட்டிக் கொண்ட­வர்கள். இவர்­க­ளிடம், மஹிந்த ராஜபக் ஷ விசு­வாசம் தாரா­ள­மா­கவே இருக்­கி­றது.

அதனால் தான், அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி சார்பில், போட்­டி­யிட கோத்­தா­பய ராஜபக் ஷவே பொருத்­த­மான வேட்­பாளர் என்­கி­றார்கள். சமல் ராஜபக் ஷ தான் சரியான தெரிவு என்­கி­றார்கள்.

இவர்­களை, கூட்டு அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேற வைத்­தது மஹிந்த ராஜபக் ஷ தான். ஆனாலும், இவர்­களை அவர் தமது கட்­சியில் இணைத்துக் கொள்ளவில்லை.

அவர்­களைத் தனி­யான அணி­யாக எதிர்க்­கட்­சியில் அமர வைத்­தி­ருக்­கிறார். இது தான் மஹிந்த ராஜபக் ஷவின் அர­சியல் காய் நகர்த்தல்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 16 பேர் கொண்ட அணியை தனி­யாக வைத்திருப்பதற்கு பல காரணங்கள் உள்­ளன.

அதில் ஒன்று, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மீதான தாக்­குதல் நோக்கம்.

மற்­றொன்று, பொது­ஜன பெர­மு­னவை தற்­காத்துக் கொள்ளும் நோக்கம். மஹிந்த ராஜபக் ஷவைப் பொறுத்­த­வ­ரையில், பொது­ஜன பெர­முன பல­ம­டைய வேண்டுமானால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல­வீ­ன­ம­டைய வேண்டும்.

ஐ.தே.கவில் இருந்து யாரும் சென்று மஹிந்­தவைப் பலப்­ப­டுத்­த­வில்லை. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சிக்குள் இருந்தே, அவர் தன்னைப் பலப்­ப­டுத்திக் கொண்டார்.

எனவே, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குத் தொடர்ந்து தலை­வ­லியைக் கொடுத்து, அதனைப் பலமடை­யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு இவர்கள் தேவைப்­ப­டு­வார்கள்.

இவர்­க­ளையும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் இருந்து வெளியே தள்ளி விட்டால், அந்தக் கட்சிக்குள் மாற்றுக் கருத்­து­டைய அணி இருக்­காது. எஞ்­சி­யி­ருப்­ப­வர்கள், சந்­தி­ரிகா  மைத்திரிபால சிறி­சேன சொல்­வதை ஏற்று நடப்­பார்கள். பலமடையாவிடினும், அந்தக் கட்சி பாதுகாக்­கப்­படும்.

16 பேர் கொண்ட அணி அதற்குள் இருந்தால் தொடர்ந்து கலகம் இருந்து கொண்டே இருக்கும். ஒற்றுமை பற்றிப் பேசு­வார்கள். முடி­வு­களை எடுக்க விடாமல் குழப்புவார்கள்.

இதனால் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மைத்­து­வமும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சியும் தள்ளாடும்.

எனவே தான், 16 பேரையும் பொது­ஜன பெர­மு­ன­வுக்குள் உள்­வாங்­காமல், தொடர்ந்தும், எதிர்க்கட்சி வரி­சையில் தனி­யாக அமர வைத்­தி­ருக்­கிறார் மஹிந்த.

இவர்கள் அவ்­வப்­போது மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் விசு­வா­சிகள் போல பேசுவார்கள். திடீ­ரென மஹிந்­தவின் பக்கம் பேசு­வார்கள். இரண்டு பக்­கத்­துக்கும் நல்­ல­வர்­க­ளாக நடந்து கொள்ள முனை­கி­றார்கள்.

ஆனால் இதற்குப் பின்னால் ஓர் ஆபத்தும் அவர்­க­ளுக்கு இருக்­கி­றது.

இவர்­களை மஹிந்த ராஜபக் ஷ தனி­யாக வைத்­தி­ருப்­பதன் பின்னால் உள்ள, இரண்டா­வ­தான காரணம் தான் அது. அதா­வது தற்­காப்பு நோக்கம்.

16 பேர் கொண்ட அணி, தமது கட்­சிக்குள் புகுந்து குழப்­பத்தை ஏற்­ப­டுத்தி விடக்கூடும் என்ற சந்தே­கமும் மஹிந்­த­வுக்கு உள்­ளது.

அதா­வது, ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்­பாக 16 பேர் அணி வெளி­யிட்ட கருத்துக்களால் மஹிந்த அணி குழம்பிப் போயுள்­ளது.

அடுத்த ஜனா­தி­பதி வேட்­பாளர் யார் என்று கேட்­டாலே மஹிந்த தரப்­புக்கு குழப்பம் வந்து விடும். ஏனென்றால் அதனை முடிவு செய்ய முற்­படும் போது தமது அணிக்குள் பிரச்­சினை ஏற்­படும் என்பது மஹிந்­த­வுக்­குப தெரியும்.

அதனால் அந்த விவ­கா­ரத்தில் இப்­போது முடி­வு­களை எடுக்க அவர் தயா­ரில்லை.

இப்­ப­டி­யான நிலையில், 16 பேர் கொண்ட அணி, கோத்­தாவே வேட்­பாளர், சமல் ராஜபக் ஷவே வேட்­பாளர் என்று முன்­மொ­ழி­வதை மஹிந்த அணி­யினர் விரும்பவில்லை. அவர்கள் தமக்குள் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும் உள்­நோக்­கத்­துடன் செயற்­ப­டு­கி­றார்­களோ என்ற சந்­தே­கமும் இருக்கிறது.

ஏற்­க­னவே இந்த 16 பேரும் பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்து செயற்­ப­டு­வது பற்றி அதன் தலைவர் பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரீ­ஸிடம் கேள்வி எழுப்­பிய போது, “அவர்கள் மஹிந்­தவின் தலைமையை ஏற்றுக் கொண்டால் இணைத்துக் கொள்வோம்” என்று கூறி­யி­ருந்தார்.

அதா­வது இரண்டு தலை­மை­யுடன் செயற்­பட முடி­யாது. மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலைமையை நிரா­க­ரித்து மஹிந்­தவின் தலை­மையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்­பதே அவரது கருத்து.

அதற்கு 16 பேர் கொண்ட அணியில் உள்ள எல்­லோரும் தயா­ராக இல்லை. இவர்­களில் அநேகர், மீண்டும் மகிந்­தவை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் கொண்டு வந்து ஒரே அணி­யாக அதனைப் பலப்­ப­டுத்த முடியும் என்று நம்­பு­கின்­றனர்.

அதற்­காக கட்­சியின் சின்­னத்தை விட்­டுக்­கொ­டுத்து பொதுச் சின்­னத்தில் போட்டியிடு­வ­தற்கும் தயா­ராக இருக்­கின்­றனர்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை ஒன்­று­ப­டுத்த வேண்டும் என்ற கருத்து இவர்­க­ளிடம் இருந்­தாலும், மஹிந்த ராஜபக் ஷவின் இலக்கு அது­வல்ல. அவர் அத்­த­கைய இலக்குடன் கடந்த உள்­ளூ­ராட்சித் தேர்தல் வரை இருந்திருக்கலாம்.

அந்த தேர்தலில் தனது பலத்தை அறிந்து கொண்ட பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் மஹிந்த மீண்டும் இணைந்து கொள்வதற்கு சாத்தியங்கள் குறைவு.

இந்தநிலையில், மூன்று அணிகளாக சுதந்திரக் கட்சி பிளவுண்டு நிற்கிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரையில் வரலாற்றில் பல மோசமான பின்னடைவுகளையும், நெருக்கடிகளையும் சந்தித்திருக்கிறது.

ஆனாலும் பின்னர் மீண்டெழுந்து தனது பலத்தை நிரூபித்திருக்கிறது.

மீண்டும் அத்தகையதொரு பலத்துடன் எழும்பக் கூடிய நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இருக்கிறதா என்பதை இப்போது முடிவு செய்ய முடியாது.

(ஞாயிறு வீரகேசரி பத்திரிக்கையில் வெளிவந்த சிறப்பு கட்டுரை) 

 

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments