செய்தி:- முஸாதிக் முஜீப்
இலங்கைத்தூதரக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையருக்கான இப்தார் நிகழ்வு நேற்று (01.06.2018) மிக சிறப்பாய் இடம்பெற்றது. மேலும் கத்தார் நாட்டின் இலங்கை தூதுவர் கௌரவ அதிமேதக ஏ.எஸ்.பி. லியனகே அவர்களின் தலைமையில் இடம்பெற்ற் இந்நிகழ்வில் ஆண்கள் பெண்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் தமது குடும்பம் சகிதம் வருகை தந்தவுடன் சுமார் 3000 க்கு மேற்பட்ட இலங்கையர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் கட்டாருக்கான இலங்கை தூதரகத்தின் முதலாம் நிலை செயலாளர் ஏ.அமானுல்லாஹ் அவர்களினால் வரவேற்புரை இடம்பெற்றது. இலங்கைக்கான தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகேயினால் உரிய நேரத்தில் சமூகமளிக்க முடியாமலிருந்தமையினால் அவர் சார்பாக அமைச்சு ஆலோசகர் ஆர்.கோகுல் ரங்கன் உரை நிகழ்த்தியதுடன் இப்தார் உரையை ஷேக் அசாத் ஸிராஸ் நலீமி நிகழ்த்தினார்.
சிறிது நேரத்திற்கு பின் அங்கு வருகைதந்த இலங்கைக்கான தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகே கத்தாரில் வசிக்கும் சில முக்கியத்தர்களுடன் நிற்பதையும் படத்தில் காணலாம்.