நாட்டிலுள்ள 341 உள்ளுராட்சி மன்றங்களில் தேர்தல் பிரகடனப்படுத்தப்படாமல் எஞ்சியுள்ள 248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை கோரும் அறிவித்தல் இன்று வெளியிடப்படும்.
இன்று முதல் 20ம் திகதி வரை கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்படும். வேட்புமனுக்கள் இம்மாதம் 18ம் திகதி முதல் 21ம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்று பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹம்மத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர், வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் இம்மாதம் 11ம் திகதி முதல் 14ம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் எந்தத் தினம் என்ற விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை.