டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக தொடர்களை வெற்றிகொண்ட அணியாக இங்கிலாந்தும், அவுஸ்திரேலியாவும் திகழ்கின்றன.
இங்கிலாந்து அணி 1884ஆ-ம் ஆண்டிலிருந்து 1892ஆ-ம் ஆண்டு வரை தொடர்ந்து 9 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியிருந்தது.
இதே போல் அவுஸ்திரேலியா 2005ஆ-ம் ஆண்டிலிருந்து 2008ஆ-ம் ஆண்டுக்குள் தொடர்ந்து 9 தொடர்களை வசப்படுத்தியிருந்தது. இந்த உலக சாதனையை சமன் செய்ய இந்திய அணிக்கு அருமையான சந்தர்ப்பம் கனிந்துள்ளது.
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தற்போது தொடர்ந்து 8 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. அதாவது 2015ஆ-ம் ஆண்டில் இலங்கை (2–-1), தென்னாபிரிக்கா (3–-0), 2016ஆ-ம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் (2–-0), நியூஸிலாந்து (3–-0), இங்கிலாந்து (4–-0), 2017ஆ-ம் ஆண்டில் பங்களாதேஷ் (1–-0), அவுஸ்திரேலியா (2–-1), இலங்கை (3–-0) ஆகிய அணிகளை வெற்றிகொண்டுள்ளது.
இப்போது இலங்கையு டன் நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரை இந்தியா வெற்றி காணும் பட்சத்தில், தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் தொடர்களை வெற்றி கொண்ட அணிகள் வரிசையில் இந்தியாவும் இணையும்.