ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுதடைப்பட்ட மின்கட்டமைப்பை சீர்செய்ய தொடர்ந்தும் நடவடிக்கை

தடைப்பட்ட மின்கட்டமைப்பை சீர்செய்ய தொடர்ந்தும் நடவடிக்கை

0Shares

10 இலட்சத்து 700 மின்சாரக் கட்டமைப்புக்கள் பாதிப்பு என்கிறார் அமைச்சர்

தொடர் மழை கார­ண­மாக துண்­டிக்­கப்­பட்­டி­ருக்கும் மின் விநி­யோகத்தை மீண்டும் சாதா­ரண நிலைக்கு கொண்­டு­வரும் விடயத்தில் கால­தா­மதம் ஏற்­பட்­டுள்­ளது. எனினும் இது­வ­ரைக்கும் பாதிக்­கப்­பட்­டதில் அரை­வா­சிக்கும் அதிகமாக சீர்­செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது என மின்­வலு மற்றும் மீள் புத்­தாக்க சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்­ப­லாப்­பிட்­டிய தெரி­வித்தார்.

நாட்டில் ஏற்­பட்­டி­ருக்கும் அனர்த்த நிலையில் மின் விநி­யோகம் தொடர்பில் மின்­வலு மற்றும் மீள் புத்­தாக்க சக்தி அமைச்சில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில், நாட்டில் ஏற்­பட்ட சீரற்ற கால­நி­லை­யுடன் கடந்த 29ஆம் திகதி இரவு 9மணி­ய­ளவில் ஏற்­பட்ட கடும் காற்று கார­ண­மாக 10இலட்­சத்து 700 மின்­சார கட்­ட­மைப்­புகள் பாதிக்­கப்­பட்­டன. இதனால் நாட்டில் மொத்த மின் நுகர்­வோரில் 15வீத­மா­ன­வர்­க­ளுக்கு மின் விநி­யோகம் தடைப்­பட்­டது. குறிப்­பாக காலி, கொழும்பு, களுத்­துறை மற்றும் தெற்கு பிர­தே­சங்­களே அதி­க­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

அத்­துடன் கடந்த 29ஆம் திகதி இரவு 8.45 மணி­ய­ளவில் மொத்த மின் தேவை­யாக 1526 மெகாவோட் இருந்தது. என்­றாலும் அன்­றை­ய­தினம் 10 மணி­ய­ளவில் திடீ­ரென மின் தேவை 727 மெகாவோட் வரை குறைந்­தது. ஒரே­த­ட­வையில் மின்­சார கட்­ட­மைப்பில் இவ்­வா­றான மாற்றம் ஏற்­ப­டும்­போது கட்­ட­மைப்­புக்குள் பாரிய சிக்கல் ஏற்­ப­டுக்­கின்­றது. இவ்­வாறு மின் தேவை குறை­வ­டைந்­தது மக்­க­ளுக்கு அவ­சியம் இல்லை என்­ப­தனால் அல்ல. மாறாக ஏற்­பட்ட கடும் காற்று கார­ண­மாக மின் கம்­பங்கள் முறிந்து மின்­துண்­டிக்­கப்­பட்­டமையே காரணமாகும்.

நாட்டில் இதற்கு முன்­னரும் இவ்­வா­றா­ன­தொரு நிலை ஏற்­பட்­ட­போது ஒட்­டு­மொத்த மின் கட்­ட­மைப்பும் செய­லி­ழந்­தது. ஆனால் எமது அதி­கா­ரிகள் அன்று பெற்­றுக்­கொண்ட அனு­ப­வத்தின் மூலம் நாட்­டுக்கு பாரிய பாதிப்பு ஏற்­ப­டாமல் நிலை­மையை சீர்­செய்­துள்­ளனர். ஆனால் வர­லாற்றில் ஆகக்­கு­றைந்த மின்­தேவை ஏற்­பட்­டது கடந்த 29ஆம் திகதி இர­வாகும். அதா­வது முழு நாட்­டுக்­கு­மான மின்­தேவை 727 மெகாவோட் வரை கீழ் இறங்­கி­யது.

எனவே மின்­சார கட்­ட­மைப்பை சாதாரண நிலைக்கு கொண்­டு­வர அதி­கா­ரிகள் அர்ப்­ப­ணிப்புன் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­போதும் தொடர்ந்து பெய்துவரும் மழை கார­ண­மாக அந்த பணி­களில் தாமதம் ஏற்­ப­டுள்­ளன. இருந்­த­போதும் இன்று (நேற்று) வரைக்கும் பாதிக்­கப்­பட்ட மின் கட்­ட­மைப்பில் அரை­வா­சிக்கும் அதிகம் சீர்­செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது. இன்னும் சுமார் 5இலட்சம் மின் கட்­ட­மைப்­புகள் சீர் செய்யப்பட வேண்டியுள்ளது. அதனையும் மிகவிரைவில் சீர்செய்வதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றோம். அதற்கு தேவையான அனர்த்த பாதுகாப்பு அதிகாரிகள் அதிகமானோர் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments