ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுபேச்சுவார்த்தைக்கு இனிமேல் இடமில்லை

பேச்சுவார்த்தைக்கு இனிமேல் இடமில்லை

0Shares

பொது எதிரணி தனித்தே போட்டி என்கிறார் கெஹெலிய

தேசிய அர­சாங்­கத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் கூட்­ட­ணி­ய­மைத்­துள்ள ஜனா­தி­பதி மைத்­ தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யுடன் எவ்­வி­தத்­திலும் ஒன்­றித்து பய­ணிக்க முடி­யாது. எனவே இனி பேச்சுவார்த்  தைக்­கான வாய்ப்­புகள் இல்லை. உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள உள்­ளூ­ராட்­சி­மன்ற  தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் பொது­ஜன பெர­முன தனித்து போட்­டி­யி­டு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ளது என்று பேச்சுவார்த்தைக்கான எதிரணி இணைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹேலிய ரம்புக்வல தெரிவித்தார்.

கூட்டு எதிர் கட்­சியில் செயற்­படும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ உள்­ளிட்ட சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்கள் 42 பேரரும் அனைத்து எதி­ரணி பங்­கு­தா­ரர்­களும் இந்த தீர்­மா­னத்தை ஏக­ம­ன­தாக எடுத்­துள்­ள­னர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுதந்திரக்கட்சியுடன் பொது எதிரணி ஒன்றிணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தவிடயம் குறித்து கேட்டபோதே கெஹேலிய ரம்புக்வல எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் 7 நிபந்­த­னை­களை முன்­வைத்து எதி­ர­ணியில் உள்ள சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்களான நாம் கட்­சியின் தலை­மை­ய­கத்­திற்கு கடிதம் ஒன்றை அனுப்­பி­யி­ருந்தோம். அதில் முத­லா­வது நிபந்­த­னையே ஐக்­கிய தேசிய கட்­சி­யு­ட­னான கூட்­டாட்­சியில் இருந்து விலக வேண்டும் என்­ப­தாகும். இதனை இழுத்­த­டிப்­பிற்குள் தள்ளும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலைமை­யி­லான குழு­வுடன் இனி ஒன்­றிணைவது சாத்­தி­ய­மற்ற விட­ய­மாகும்.

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் ஆத­ரவை பெற்­றுக்­கொள்ளும் நோக்கில் கடந்த மாதம் 19 ஆம் திகதி கூட்டு எதிர் கட்­சியில் செயற்­படும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு கடிதம் அனுப்பி வைக்­கப்­பட்­டது. ஆனால் இந்த தேர்­தலில் வெற்­றிப்­பெ­று­வது எமது நோக்­க­­மாகும். எவ்­வா­றா­யினும் எதிர்­வரும் உள்­ளு­ராட்­சி­மன்ற தேர்­தலை வெற்­றிப்­பெ­று­வ­தாயின் பொது­மக்கள் மற்றும் கட்­சியின் ஆத­ரா­வா­ளர்கள் மத்­தியில் நம்­பிக்­கையை முதலில் வெற்­றிக்­கொள்ள வேண்டும்.

ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் கூட்­ட­ணி­ய­மைத்து சுதந்­திர கட்சி கொள்கை மாறி­யுள்­ளது. எனவே எதிர் வரும் உள்­ளு­ராட்­சி­மன்ற தேர்­தலில் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வ­தாயின் 7 நிபந்­த­னை­க­ளையும் நல்­லாட்­சியில் உள்ள சுதந்­திர கட்சி அமுல்­ப­டுத்த வேண்டும்.

அதா­வது ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற கூட்­டாட்­சியில் இருந்து சுதந்­திர கட்சி உட­ன­டி­யாக வெளியேற வேண்டும். எவ்­வி­த­மான கட்­டுப்­பா­டு­மின்றி அதி­க­ரிக்­கப்­படும் வாழ்க்கை செலவை குறைக்க வேண்டும். மேலும் தேசிய வளங்­களை அந்­நிய நாடு­க­ளுக்கு விற்கும் நல்­லாட்­சியின் செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக ஆட்­சியில் உள்ள சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்கள் பத­வி­களை துறந்து போராட வேண்டும் என்­பவை எமது நிபந்­த­னை­களின் சில­வாகும்.

இவை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கு­மாயின் ஆத­ரவு வழங்­கு­வது குறித்து சிந்­திக்க முடியும். உள்­ளு­ராட்­சி­மன்ற தேர்தில் வெற்­றிப்­பெ­று­வ­தற்கு இந்த விட­யங்கள் மிகவும் முக்கியமானவையாகும். ஆனால் துரதிஷ்டவசமாக இதுவரையில் சாதகமான பதிளில்லை. எனவே இனிவரும் காலங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனோ அல்லது ஆட்சியில் உள்ள சுதந்திர கட்சியினருடனோ எவ்விதமான பேச்சுக்களையும் இனி முன்னெடுப்பதில்லை என்பதே கூட்டு எதிர் கட்சியின் தற்போதை தீர்மானமாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments