ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுதாழமுக்கம் சூறாவளியாக மாறியது சீரற்ற காலநிலை தொடரும் அபாயம்

தாழமுக்கம் சூறாவளியாக மாறியது சீரற்ற காலநிலை தொடரும் அபாயம்

0Shares

வங்­கா­ள­ வி­ரி­கு­டாவின் தாழ­முக்க சுழல் காற்று இலங்­கையை கடந்து அர­புக்­க­டலை நோக்கி நகர்ந்­துள்ள போதிலும் தற்­போது தாழ­முக்கம் சூறா­வ­ளி­யாக மாறி­யுள்­ளது. இலங்­கைக்கு நேர­டி­யான தாக்­கங்கள் இல்­லை­யென கூறப்­ப­டு­கின்ற போதிலும் சீரற்ற கால­நிலை தொடரும் எனவும் கால­நிலை அவ­தான நிலையம் தெரி­வித்­துள்­ளது.

சீரற்ற கால­நி­லையின் கார­ண­மாக இது­வ­ரையில் 11 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன், ஐவர் காணாமல் போயுள்­ளனர். 11 மாவட்­டங்­களில் மொத்­த­மாக 61 ஆயிரத்துக்கும் அதி­க­மான பொது­மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். வங்­கா­ள ­வி­ரி­குடா பகு­தியில் ஏற்­பட்­டி­ருந்த தாழ­முக்கம் இலங்­கைக்கு அருகில் சுழல் காற்­றுடன் கூடிய கால­நி­லை­யினை உரு­வாக்­கி­யி­ருந்த நிலையில், தற்­போது அரபுக் கடல் பகு­தியை நோக்கி நகர்ந்­துள்­ளது. இலங்­கையில் இருந்து 500- தொடக்கம் 600 கிலோ­மீற்றர்

தூரத்தில் தற்­போது சூறா­வ­ளி­யாக அது மாறி­யுள்­ளது. ஒக்கி (OCKHI) என பங்­க­ளாதேஷ் கால­நிலை அவதான நிலை­யத்­தினால் பெயர் சூட்­டப்­பட்ட இந்த சூறா­வ­ளி­யா­னது இலங்­கைக்கு நேர­டி­யான தாக்­கத்தை ஏற்­ப­டுத்த வாய்ப்­புகள் மிகவும் குறை­வாக இருந்த போதிலும் நிலவும் சீரற்ற கால­நிலை இன்னும் சில தினங்களுக்கு தாக்­கத்தை செலுத்தும் என கால­நிலை அவ­தான நிலையம் தெரி­வித்­துள்­ளது.

தற்­போது வரையில் மணித்­தி­யா­லத்­திற்கு 25 கிலோ­மீற்றர் வேகத்தில் இந்த சூறாவளி மேற்­கு-­வ­ட­மேற்குத் திசையில் இலங்­கை­யை­விட்டு அப்பால் நகர்­வதன் கார­ணத்­தினால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் கூறப்­ப­டுள்­ளது. எனினும் சூறா­வளி எந்­தப்­பக்கம் நகரும் என்­பது எதிர்­வு­கூட முடி­யாத நிலையில் தொடர்ந்தும் அவ­தா­ன­மா­கவும் முன்­னா­யத்த அனர்த்த நட­வ­டிக்­கை­களை தயார் நிலையில் வைத்­தி­ருக்­கு­மாறும் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் வலி­யு­றுத்தி யுள்ளது.

இந்­நி­லையில் அரபிக் கடலில் உரு­வா­கி­யுள்ள இந்த சூறா­வ­ளி­யா­னது எதிர்­வரும் 5ஆம் திக­தி­வரை அப் பகு­தியில் தாக்கம் செலுத்தும் என எதிர்­வு­கூ­றப்­ப­டு­கின்­றது.

55,000 பேர் பாதிப்பு

இலங்­கையில் தொடர்ச்­சி­யாக நில­வி­வரும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக இது­வரை 11 மாவட்­டங்­களை சேர்ந்த 84 பிர­தேச செய­லாளர் பிரி­வுகள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இவற்றில் இது­வ­ரையில் 14 ஆயி­ரத்து 617 குடும்­பங்­களை சேர்ந்த 55 ஆயி­ரத்து 855 நபர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் 11 ஆயி­ரத்து 397 வீடுகள் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ள­துடன் 430 வீடுகள் முழு­மை­யாக சேத­மைந்­துள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது.

அத்­துடன் தொடர்ச்­சி­யா­க­பெய்­து­வரும் மழை­யினால் மலை­ய­கத்தில் பல்­வேறு இடங்­க­ளிலும் வீடுகள்,விவ­சா­யக்­கா­ணிகள் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் மக்­களின் அன்­றாட வாழ்க்கை சீர்குலைந்துள்ளது.

இது­வ­ரையில் அனர்த்­தத்தில் சிக்­குண்டு 8 பேர் உயி­ரி­ழந்­துள்­ளதுடன் 8 பேர் காண­மால்­போ­யுள்­ளனர். 30 பேர் பாரிய காயங்­கள் காரணமாக வைத்­தி­ய­சா­லைகளில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். மேலும் 11 மாவட்­டங்­களில் ஏற்­பட்­டுள்ள அனர்த்­தங்­களின் சிக்­குண்ட மக்கள் முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர். இது­வ­ரையில் 901 குடும்­பங்­களை சேர்ந்த 3279 நபர்கள் மொத்­த­மான 28 முகாம்­களில் தற்­போது வரையில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

களுத்துறையில் அதிக பாதிப்பு

களுத்­துறை மாவட்­டமே அதி­க­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் 8 ஆயி­ரத்து 18 குடும்­பங்­களை சேர்ந்த 31 ஆயி­ரத்து 314 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 285 வீடுகள் முழு­மை­யா­கவும் 6596 வீடுகள் பகுதி அள­விலும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

கம்­பஹா மாவட்­டத்தில் 8ஆயி­ரத்து 765 குடும்­பங்­களை சேர்ந்த 34ஆயி­ரத்து 336 நபர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். காலி மாவட்­டத்தில் 3145 குடும்­பங்­களை சேர்ந்த 11ஆயி­ரத்து 320 நபர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். மூன்று மர­ணங்­களும் பதி­வா­கி­யுள்­ளது. மாத்­தளை மாவட்­டத்தில் 3884 குடும்­பங்­களை சேர்ந்த 14 ஆயி­ரத்து 49 பேரும் , பதுளை மாவட்­டத்தில் 1316 குடும்­பங்­களை சேர்ந்த 4821 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். மூன்று மர­ணங்­களும் பதி­வா­கி­யுள்­ளது.

நீர்த்­தேக்­கங்கள், ஆறு­களின்  நீர் மட்டம் உயர்வு 

மழையுடனான கால­நிலை தொடர்­வதால் நில்­வள, ஜின் மற்றும் களு கங்­கை­களின் நீர் மட்டம் அதி­க­ரித்­துள்­ளது.நேற்று காலை பெய்த கன­ம­ழையை அடுத்து மீண்டும் தாழ்­நில பகு­திகள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. களுத்­துறை , வலல்­லா­விட்ட மற்றும் புளத்­சிங்­கள பகு­தி­களில் தாழ் நிலப்­பி­ர­தே­சங்கள் நீரில் மூழ்­கி­யுள்­ளன . நில்­வள கங்கை பெருக்­கெ­டுத்­துள்­ளதன் கார­ணத்­தினால் அகு­ரெஸ்ஸ – உடு­கம , அகு­ரெஸ்ஸ -பங்­கம மற்றும் அகு­ரெஸ்ஸ கத்­தூவ போன்ற வீதிகள் முழு­மை­யாக நீரில் மூழ்­கி­யுள்­ளன. மலை­ய­கத்தின் நீர்த்­தேக்­கங்கள் மற்றும் பிர­தான நீர்த்­தேக்­கங்கள் அனைத்­திலும் நீர் மட்டம் உயர்­வ­டைந்­துள்­ளது. மேல் கொத்­மலை, லக்­ஸ­பான, மகா­வலி நீர்த்­தேக்­கங்­களின் வான்­க­த­வுகள் சிலவும் திறந்­து­வி­டப்­பட்­டுள்­ளன. அத்­துடன் மகா­வலி கங்கை, களனி கங்கை, களு­கங்கை ஆகிய ஆறு­களும் பெருக்­கெ­டுத்­துள்ள நிலையில் தாழ்­நில பகு­தி­களில், ஆறு­களின் அரு­கி­லுள்ள பொது­மக்கள் அவ­தா­ன­மாக இருக்­கு­மாறு அனர்த்த முகா­மைத்­துவ மையம் அறி­வித்­துள்­ளது.

காலியில் சிறிய அள­வி­லான சூறா­வளிக் காற்று.  

இதே­வேளை காலி பிர­தே­சத்தில் நேற்று முன்­தினம் பிற்­பகல் சிறிய அள­வி­லான சூறா­வளி காற்றும் வீசி­யுள்­ளது.

‘டொர்­னடோ’ என்று அழைக்­கப்­படும் சூறா­வளி குறித்த காணொ­ளி­யொன்றை குறித்த பிர­தேச மக்கள் சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வேற்­றி­யுள்­ளதை அடுத்து அது­கு­றித்து கால­நிலை அவ­தான நிலையம் கவனம் செலுத்­தி­யுள்­ளது. பாதிப்­புகள் ஏற்­ப­டாத வகையில் சாதா­ரண அளவில் ஏற்­பட்­டுள்ள இந்த காற்று அழுத்தம் குறித்து அச்சம் கொள்­ளத்­தே­வை­யில்லை எனவும் காலநிலை அவதான நிலையம் தெரி­வித்­துள்ளது.

முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கைகள்

அனர்த்­த­மொன்று ஏற்­படும் பட்­சத்தில் உட­ன­டி­யாக அனர்த்தம் குறித்து அறி­விக்க உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சால் 1902 என்ற அவ­சர தொலைப்­பேசி இலக்கம் வழங்­கப்­பட்­டுள்­ளது. குறித்த இலக்­கத்­துக்கு அழைப்­பதன் மூலம் உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சின் செய­லா­ள­ருக்கு அனர்த்த நிலை தொடர்பில் தக­வல்­களை பெற்­றுக்­கொ­டுக்க முடியும் என அந்த அமைச்சு விடுத்­துள்ள அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

நான்கு மாவட்­டங்­க­ளுக்கு தொடர்ந்தும் மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை.

இதேவேளை தொடர்ந்தும் மழை­வீழ்ச்சி காணப்­ப­டு­வதை அடுத்து இரத்­தி­ன­புரி, களுத்­துறை, நுவ­ரெ­லியா, பதுளை ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு தொடர்ந்தும் மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. நேற்று சில பகு­தி­களில் மண்­ச­ரி­வுகள் ஏற்­பட்­டுள்­ளதை அடுத்து பாரிய விளை­வுகள் ஏற்­பட முன்னர் மக்­களை பாது­காப்­பான இடங்­க­ளுக்கு நக­ரு­மாறு அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

நுவ­ரெ­லியா மாட்­டத்தின் 14 கிரா­மங்கள் மற்றும் தோட்­டங்கள் மண்­ச­ரிவு மற்றும் மழை­நீ­ரினால் நிரம்பி சேதத்­திற்கு உள்­ளா­கி­யுள்­ளன. இதில் 421 குடும்­பங்­களைச் சேர்ந்த 1781 நபர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். கந்­தப்­பளை,பொர­லந்த,பட்­டி­பொலை,சாந்­தி­புர,பம்­ப­ர­கலை,ரத்­ன­கிரி,என்போல்ட்,சந்­தி­ரி­காமம்,டய­கம,எல்­பெத்த,பட்­டி­பொல,பாமஸ்டன் மற்றும் நுவ­ரெ­லி­யா­ஆ­கிய பிர­தே­சங்­க­ளிலே இவ்­வா­றான அனர்த்­தங்கள் ஏற்­பட்­டுள்­ள­தாக பிர­தே­ச­செ­ய­லாளர் தெரி­வித்தார்.

அதே­வேளை இரத்­தி­ன­புரி, பதுளை ஆகிய மாவட்­டங்­களில் பல்­வேறு இடங்­களில் சிறிய அளவில் மண் மேடுகள், பாறைகள் வீழ்ந்­துள்ள நிலையில் மக்­களை அவ­தா­ன­மாக இருக்­கு­மாறு அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்­றது. மழைக் கால­நிலை தொடர்ச்­சி­யாக நில­வி­வ­ரு­வதை அடுத்து இரத்­தி­ன­புரி, களுத்­துறை, பதுளை ஆகிய மாவட்­டங்கள் அதிகமாக பாதிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மழைக் காலநிலை தொடரும்.

சுழல் காற்று காலநிலை மாற்றம் கண்டுள்ள போதிலும் தொடர்ச்சியாக சில தினங்களுக்கு மழைக் காலநிலை தொடரும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. நேற்று அதிகலையில் இருந்து வடக்கு, மத்திய, வடமேல், மேல், கிழக்கு, ஊவா மாகாணங்களில் கனமழை பெய்துவருகின்றது. நுவரெலியாவின் சில பகுதிகளில் 135 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. கொழும்பு, காலி, களுத்துறை இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் 60- – 70 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. ஆகவே இன்னும் சில தினங்களுக்கு மழைக் காலநிலையும் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்திலான காற்றும் வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கரையோர பகுதிகளிலும் தொடர்ச்சியாக அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments