ColourMedia
WhatsApp Channel
Homeவிளையாட்டுஆஸி.யுடன் பகலிரவு டெஸ்டில் ஆடப்போகும் இலங்கை

ஆஸி.யுடன் பகலிரவு டெஸ்டில் ஆடப்போகும் இலங்கை

0Shares

இலங்கை அணி அடுத்த வருடம் ஜன­வரி மாதம் அவுஸ்­தி­ரே­லிய அணி­யுடன் இரு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத­வுள்­ளது.

இத் தொடரின் முத­லா­வது டெஸ்ட் போட்டி பக­லி­ரவு ஆட்­ட­மாக நடை­பெ­ற­வுள்­ளமை விசேட அம்­ச­மாகும்.

இது­வ­ரையில் இலங்கை அணி ஒரே ஒரு பக­லி­ரவு டெஸ்ட் போட்­டியில் மட்­டுமே விளை­யா­டி­யுள்­ளது.

அது கடந்த ஆண்டு டுபாயில் நடை­பெற்ற பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான போட்­டி­யாகும்.

அப் போட்­டியில் இலங்கை அணி வெற்­றி­பெற்று தான் விளை­யா­டிய முதலாவது பக­லி­ரவு போட்­டியை வெற்­றி­கொண்ட சாத­னை­யையும் படைத்­தது.

இந்­நி­லையில் அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் இலங்கை அணி அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்டு விளை­யா­டவுள்ளது.

இதற்கு முன் கடந்த 2016ஆம் ஆண்டு அவுஸ்­தி­ரே­லிய அணி இலங்­கைக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்டு மூன்று போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை­யா­டி­யி­ருந்­தது.

இத் தொடரில் அவுஸ்­தி­ரே­லிய அணி “வைட் வொஷ்” தோல்­வியைத் தழுவி வெறுங்­கை­யுடன் நாடு திரும்பியிருந்தது.

அப்போது ஸ்மித், வோர்னர் ஆகியோரும் அணியில் இடம்பெற் றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments