இன்று ஆரம்பமாகும் உள்நாட்டு கிரிக்கட் சுற்றுத்தொடரில் விளையாடினால் மாத்திரமே லஸித் மலிங்க இலங்கையின் ஒருநாள் சர்வதேச அணிக்கு தெரிவு செய்யப்படுவார் என்று ஸ்ரீலங்கா கிரிக்கட் அமைப்பின் தலைவர் திலங்க சுமத்திபால அறிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச சுற்றுத்தொடரின் அணியொன்றுக்காக லஸித் மலிங்கவின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் இந்தியன் பிரிமியர் லீக் சுற்றுத்தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக பணியாற்றி வருகிறமை குறிப்பிடத்தக்கது.