சுப்பர்-4 மாகாண மட்டத்திலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு, காலி, கண்டி மற்றும் தம்புள்ளை ஆகிய கிரிக்கெட் அணிகள் இதில் போட்டியிடவுள்ளன.
தினேஷ் சந்திமால் கொழும்பு அணிக்கு தலைமை தாங்குகிறார். உப்புல் தரங்க காலி அணியை வழி நடத்துகிறார். கண்டி அணியை அஞ்சலோ மெத்தியூஸ் தலைமை தாக்குகிறார். குசல் ஜனித் பெரேரா தம்புள்ளை அணிக்கு தலைமை தாங்குகிறார். 19 வயதிற்குட்பட்ட இரண்டு வீரர்கள் என்ற அடிப்படையில் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் புதன்கிழமை கொழும்பு மற்றும் தம்புள்ளை அணிகளுக்கான போட்டி ஆர்.பிரேமதாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. கண்டி மற்றும் காலி அணிகளுக்கு இடையிலான போட்டி பி.சரவணமுத்து மைதானத்தில் நடைபெறவுள்ளது.