ColourMedia
WhatsApp Channel
Homeஆன்மீகம்இன்றைய ராசிபலன் - 24.01.2024

இன்றைய ராசிபலன் – 24.01.2024

0Shares

பஞ்சாங்கம்

நாள்சோபகிருது வருடம் தை மாதம் 10 ஆம் தேதி புதன்கிழமை 24.01.2024
திதிஇன்று இரவு 10.43 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி
நட்சத்திரம்இன்று காலை 07.43 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்
யோகம்இன்று காலை 06.34 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.
நல்லநேரம்காலை: 09.30 முதல் 10.30 மணி வரை
காலை: 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 06.30 முதல் 07.30 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை. எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை. குளிகை: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.
சூலம்வடக்கு
பரிகாரம்பால்

மேஷ ராசி அன்பர்களே!

மகிழ்ச்சி தரும் நாள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களுடன் ஏற்பட்டி ருந்த மனவருத்தம் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தந்தை வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர் கள். குடும்பத்தில் உறவினர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். சிவபெருமான் வழிபாடு நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியைத் தவிர்க்கவும்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தந்தைவழியில் காரிய அனுகூலம் உண்டாகும்.

ரிஷப ராசி அன்பர்களே!

பல வகைகளிலும் அனுகூலமான நாள். சகோதரர்கள் பணம் கேட்டு நச்ச ரிப்பார்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்கக் காரியம் இழுபறியாகி முடி யும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. அம்பிகை வழிபாடு நன்று.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீட்டில் சிறப்பு வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

மிதுன ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அவர்கள் போக்கிலேயே சென்று விட்டுப்பிடிப் பது நல்லது. வாழ்க்கைத்துணை அனுசரணையாக நடந்துகொள்வார். அம்பிகையை வழிபடுவது நன்று.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவுகளால் மனச் சஞ்சலம் ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

கடக ராசி அன்பர்களே!

அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்வழியில் சில பிரச் னைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களால் குடும் பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக் கும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மகாவிஷ்ணு வழிபாடு நலம் சேர்க்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்ம ராசி அன்பர்களே!

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவ னம் தேவை. உங்களுடைய பணிகளில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக் கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்குவது நல்லது.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கன்னி ராசி அன்பர்களே!

பல வகைகளிலும் அனுகூலமான நாளாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். உறவினர் களாலும் நண்பர்களாலும் சில சங்கடங்கள் ஏற்படக் கூடும். விநாயகர் வழிபாடு தடைகளை அகற்றும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்குமேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும்.

துலா ராசி அன்பர்களே!

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சி களைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பேசும்போது பொறுமை அவசியம். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் உண்டாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கக்கூடும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளி லும் கூடுதல் கவனம் தேவை. குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படக்கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. இன்று காலபைரவரை வழிபடுவது நன்று.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்ப தற்கு வாய்ப்பு உண்டு.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசு ராசி அன்பர்களே!

சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும். நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதைத் தவிர்க்கவும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்கக் காரியம் அனுகூலமாகும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். அம்பிகை வழிபாடு நன்று.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் பிள்ளைகள் மூலம் ஆதாயம் உண்டாகும்.

கும்பராசி அன்பர்களே!

நீண்டநாள்களாக எதிர்பார்த்து ஏமாந்த பணம் இன்று கைக்கு வந்து மகிழ்ச்சி தரும். சிலருக்கு தந்தையுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவருடன் அனு சரணையாக நடந்துகொள்ள முயற்சி செய்யவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டா லும் பாதிப்பு எதுவும் இருக்காது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்று.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.

மீனராசி அன்பர்களே!

இன்று எதிலும் பொறுமை அவசியம். புதிய முயற்சிகள் இழுபறியாகும். அடிக்கடி மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலைய வேண்டியிருக்கும். வீட்டில் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் சற்று சோர்வு உண்டாகும். பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும். ஆஞ்சநேயர் வழிபாடு நலம் சேர்க்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகரிக்கும் பணிச்சுமையால் அசதி ஏற்படும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவது தாமதமாகும்.

எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;

ColourMedia WhatsApp Channel Invite

https://whatsapp.com/channel/0029VaCLbG1GufJ0P80wW90D

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments