மூளைக்காய்ச்சல் காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து காலி சிறைச்சாலையின் அனைத்து நடவடிக்கைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, 29 வயது கைதியின் மரணத்தைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட கடுமையான சுகாதார நடவடிக்கைகளின் பிரகாரம், காலி சிறைச்சாலையில் தண்டனை அனுபவிக்கவுள்ள புதிய கைதிகள் அனைவரும் அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளனர்.
காலி சிறைச்சாலையில் கடுமையான சுகாதார நடவடிக்கைகளின் கீழ் மாத்திரமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பி திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டார். ஜனவரி 03 ஆம் திகதி கொட்டவாகம பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய நபர் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கடந்த வாரம், மாத்தறை சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகளும் மூளைக்காய்ச்சலுக்கு ஆளானார்கள், மேலும் 17 பேர் அதிக காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;