பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் ஹமூத் உஸ் ஜமான் கான் (ஓய்வு பெற்றவர்), ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை புதன்கிழமை (ஜன.03) சந்தித்தார்.
கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் நான்காவது இலங்கை-பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு உரையாடலில் கலந்து கொள்வதற்காக திரு. கான் இலங்கை வந்துள்ளார். ஜனாதிபதி விக்கிரமசிங்க பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளரை அன்புடன் வரவேற்றதுடன் சுருக்கமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இக்கூட்டத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் பிரதானி சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு பெற்றவர்) ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலர், ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான திரு. சாகல ரத்நாயக்கவுடன் தனித்தனியாக கலந்துரையாடினார்.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;