இலங்கை கிரிக்கெட் (SLC) அதிகாரிகள் இன்று பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவில் (COPE) ஆஜராக உள்ளனர்.
இன்றைய கூட்டம் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகும் என கோப் தலைவர் எம்.பி.ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் 2 விசேட அறிக்கைகள் மற்றும் முன்னைய கோப் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட சிபாரிசுகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் பேராசிரியர் சரித ஹேரத் ஆகியோர் தலைமையில் கோப் குழு கூட்டங்களுக்கு தேசிய கிரிக்கட் நிர்வாக சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், இன்று எடுக்கப்படவுள்ள SLC தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில், முன்னைய கோப் தலைவர்களினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளும் உள்ளடக்கப்படலாம்.
இதற்கிடையில், இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு நவம்பர் 17 ஆம் தேதி பொது கணக்குகள் குழுவில் (COPA) ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;