தற்போது பெய்து வரும் அடை மழை காரணமாக எல்ல பகுதியில் உள்ள ராவணா நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், பார்வையாளர்கள் குளிப்பதற்கும், அருவிக்கு அருகில் செல்வதற்கும் தடை விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நீர்வீழ்ச்சியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தற்போதைக்கு அருவிக்கு அருகில் செல்வதை தவிர்க்குமாறு பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;