பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தை அண்மித்து கரையோரப் பாதையின் ஒரு பகுதியை நேற்று (06011.2023) முதல் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய வௌ்ளவத்தை முதல் கரையோர மார்க்கத்தின் கொள்ளுப்பிட்டி வரை பயணிக்கும் வாகனங்கள் பம்பலப்பிட்டி ரயில் நிலைய வீதியூடாக காலி வீதிக்கு சென்று காலி வீதியூடாக கொள்ளுப்பிட்டி வரை பயணிக்க முடியும்.
கொள்ளுப்பிட்டியிலிருந்து கரையோரப் பாதையில் வௌ்ளவத்தை வரை பயணிக்கும் வாகனங்கள் க்ளேன் ஆபர் பிளேஸில் திரும்பி காலி வீதிக்குச் சென்று டுப்ளிகேஷன் வீதியூடாக வௌ்ளவத்தை வரை செல்ல முடியும்.
மூடப்பட்டுள்ள பகுதியை தவிர்ந்து ஏனைய பகுதியில் இரு திசைகளிலும் வாகனங்கள் பயணிப்பதற்கான இயலுமை உள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;