தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர், ஸ்ரீதிவ்யா. பிறகு சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அவர், தொடர்ந்து ‘ஜீவா’, ‘வெள்ளக்கார துரை’, ‘காக்கி சட்டை’, ‘ஈட்டி’, ‘பெங்களூர் நாட்கள்’, ‘பென்சில்’, ‘மருது’, ‘ரெமோ’, ‘காஷ்மோரா’ போன்ற படங்களில் நடித்தார். கடைசியாக ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தில் நடித்தார். பிறகு அவருக்கு புதுப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழுக்கு வந்துள்ள அவர், ‘ரெய்டு’ என்ற படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்துள்ளார்.