உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களை குவித்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 101*, ஸ்ரேயாஸ் ஐயர் 77, ரோஹித் சர்மா 40 ரன்கள் எடுத்தனர். பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 83 ரங்களுக்கு ஆட்டமிழந்தது