காசாவில் சிக்கியுள்ளவர்களில் 11 இலங்கையர்கள் ரஃபா எல்லையின் ஊடாக எகிப்தை அடைந்துள்ளதாக பலஸ்தீனத்திற்கான இலங்கை தூதரக அதிகாரி பென்னட் குரே தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனத்தில் உள்ள இலங்கையின் பிரதிநிதி அலுவலகம் இந்த குழுவை நாடு கடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் தற்போது எகிப்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.