ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 45.1 ஓவரில் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீரரான தன்ஸித் ஹசன் ரன் ஏதும் எடுக்காமல் ஷாகீன் ஷா அப்ரிடி பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதன் பின்னர் களமிறங்கிய நஜ்முல் ஹோசைன் ஷான்டோ 4, முஸ்பிகுர் ரகிம் 5 ரன்களில் நடையை கட்டினர். 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மஹ்மதுல்லா, லிட்டன் தாஸுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார்.
வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் தன்ஸித் ஹசனை பாகிஸ்தானின் ஷாகீன் ஷா அப்ரிடி ஆட்டமிழக்கச் செய்தார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஷாகீன் ஷா அப்ரிடி கைப்பற்றிய 100-வது விக்கெட்டாக அமைந்தது. தனது 51-வது ஆட்டத்தில் இந்த மைல்கல் சாதனையை அவர் எட்டியுள்ளார். மேலும் உலக அரங்கில் குறைந்த ஆட்டங்களில் 100 விக்கெட்களை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் ஷாகீன் ஷா அப்ரிடி. இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 52 ஆட்டங்களில் 100 விக்கெட்களை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. இதை தற்போது ஷாகீன் ஷா அப்ரிடி முறியடித்துள்ளார். 51 ஆட்டங்களில் விளையாடிய ஷாகீன் ஷா அப்ரிடி இதுவரை 102 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;