ColourMedia
WhatsApp Channel
Homeதொழில்நுட்பம்நீங்கள் ஏழையாக பிறந்தால் அது உங்கள் தவறு ஏதும் இல்லை.ஆனால் நீங்கள் ஏழையாக இறந்தால் அது...

நீங்கள் ஏழையாக பிறந்தால் அது உங்கள் தவறு ஏதும் இல்லை.ஆனால் நீங்கள் ஏழையாக இறந்தால் அது உங்கள் தவறு;Happy Birthday, Bill Gates!

0Shares

அமெரிக்காவின் உள்ள சியாட் நகரில் 1955ம் ஆண்டு அக்டோபர் 28ல் பிறந்தார். சிறு வயதில் பில்கேட்ஸ் கல்வியில் மிகவும் பின் தங்கி இருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அறிவியலில் மிகுந்த ஆர்வம் கொண்டார். பள்ளியில் படித்தபோதே தனது 13 வயதில் கணினியில் புரோகிராம் எழுத தொடங்கினார். ஒரு கட்டத்தில் பில்கேட்ஸ்ஸின் ஆர்வத்தை அறிந்து கொண்ட பள்ளி நிர்வாகம் அவர் கணினி பயிற்சிக்காக பல சலுகைகளை வழங்கியது.

உயர் கல்வியை முடித்த பில்கேட்ஸ் அவரது நண்பர் ஒருவரோடு இணைந்து மைக்ரோ சாப்ட் நிறுவனத்தை 1975ல் தொடங்கினார். மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தலைமையகம் வாஷிங்டனில் இயங்கி வருகிறது. எம்.எஸ். விண்டோஸ் என்னும் இயங்குதள அமைப்பானது இந்த நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க மென் பொருளாகும். இந்த மென்பொருள் மைக்ரோ சாப்ட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது.

படிப்படியாக உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக உருவெடுத்தது மைக்ரோசாப்ட். இது போலவே எம்.எஸ்.வேர்டு, எக்செல் என்பது போன்ற பிரபல மென்பொருட்களையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாரித்து வழங்கியது. இந்த மென்பொருட்கள் உலக அளவில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

பில்கேட்ஸ்சின் தொடர் முயற்சியே அவரை ஒரு கட்டத்தில் உலகின் முதல் பணக்காரர் என்ற நிலைக்கு உயர்த்தியது

வாழ்வின் பல போராட்டங்களை எதிர்கொண்ட கேட்ஸ் நீங்கள் ஏழையாக பிறந்தால் அது உங்கள் தவறு ஏதும். இல்லை. ஆனால் நீங்கள் ஏழையாக இறந்தால் அது உங்கள் தவறுதான் என்றார்.

பில்கேட்ஸின் பிறந்த நாளில் அவர் குறித்த தகவலை பகிர்ந்து கொள்வதில் கலர் மீடியா(colourmedia.lk) பெருமிதம் கொள்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம்
லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ColourMedia WhatsApp Channel Invite

https://whatsapp.com/channel/0029VaCLbG1GufJ0P80wW90D

tiktok.com/@colourmedia.lk
https://www.instagram.com/colourmedia.lk/
https://youtube.com/@colourmediaNews-vt7kg?si=sMblQ1xdop8PB_1L
எமது இணையதளம் முகவரி :http://colourmedia.lk/

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments