நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியாவில் கொண்டாடப்பட்டு வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதலிடம் யாருக்கு என்பதை தீர்மானிப்பதற்கான போட்டியாக இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
நடப்பு தொடரில் இதுவரை தலா நான்கு போட்டிகளிலும் இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் முறையே முதல் இரு இடங்களில் உள்ளன. இரு அணிகளும் இந்த தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. சம பலம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இரு அணிகளும் இன்று இமாச்சல் Dharamshala-வில் உள்ள மைதானத்தில் மதியம் 2 மணிக்கு களம் காண்கின்றன.
கடந்த உலகக் கோப்பை அரையிறுதியில் நம்மை வெளியேற்றியதற்காக பதிலடி கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறது, ரோஹித் படை. பேட்டிங்கில் அசுரபலத்தில் உள்ள இந்திய அணி, சேசிங்கிலும் அசைக்க முடியாத அணியாக வலம் வருகிறது.