இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்ட நிலையில், திலங்க சுமதிபால மற்றும் அவரது நிறைவேற்று அதிகாரிகள் குழு தற்காலிக இடைக்கால நிர்வாக குழுவாக செயற்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மே 19 ஆம் திகதி நடைபெறவிருந்த தேர்தல் பிற்போடப்பட்ட நிலையில் புதிய இடைக்கால நிர்வாக குழு தொடர்பான இந்த அறிவிப்பு விளையாட்டுத்துறை அமைச்சரால் வௌியிடப்பட்டுள்ளது.