ரோயல் குதிரை கழகத்தினால் கோடை காலத்தில் நடத்தப்படும் குதிரை போட்டிகளின் (Governors Cup) முதலாம் கட்டத்திற்கான ஆளுனர் வெற்றி கிண்ணப் போட்டி குதிரை பந்தாடத்திடலில் நாளை நடைபெறவுள்ளது.
1926 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்ட ஆளுனர் வெற்றி கிண்ணப் போட்டி தொடர்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும் எண்ணிக்கையிலானோர் கவனம் செலுத்தியுள்ளனர்.
இதற்கு பெரும் எண்ணிக்கையிலானோர் வருகை தருவார்கள் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.