காலி முகத்திடலின் செயற்பாடுகளை ஏப்ரல் 20ஆம் திகதி முதல் மட்டுப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை பத்திரத்தின்படி, காலி முகத்திடலின் இயற்கை அழகுக்கு பாதிப்பை ஏற்படுத்தம் வகையில் இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.
காலி முகத்திடலை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை துறைமுக அதிகார சபை 220 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கடந்த வருடம் இடம்பெற்ற போராட்டத்தின்போது அப்பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்வதற்கு 6.6 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே காலி முகத்திடலை பொதுமக்கள் சுதந்திரமாக பயன்படுத்துவதற்கு மாத்திரம் அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி முதல் விசேட சமய நிகழ்வுகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என அமைச்சரவை பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.