ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுஇலங்கையிலிருந்து குரங்குகள் சீன ஆய்வுகூடங்களிற்கே கொண்டுசெல்லப்படும் - சுற்றாடல் குறித்த அமைப்பு

இலங்கையிலிருந்து குரங்குகள் சீன ஆய்வுகூடங்களிற்கே கொண்டுசெல்லப்படும் – சுற்றாடல் குறித்த அமைப்பு

0Shares

இலங்கையிலிருந்து அனுப்பப்படும் குரங்குகள் சீனாவின் ஆய்வகங்களிற்கே அனுப்பப்படலாம் என  இலங்கையை சேர்ந்த சுற்றாடல் நீதி அமைப்பின் தலைவர் ஹேமந்த விதானகே தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து அனுப்பப்படும் குரங்குகளை சோதனைக்கும் அழகுசாதனப்பொருட்களை சோதனை செய்வதற்கும் மருத்துவபரிசோதனைகளிற்கும் சீனா பயன்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கை அரசாங்கம் ஒருஇலட்சம் குரங்குகளை சீனாவிற்கு அனுப்பினாலும் இலங்கையி;ல் குரங்குகளின் எண்ணிக்கை குறையப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளா

இந்த வகை குரங்குகளை தலதா மாளிகை அனுராதபுர மிகிந்தல போன்ற ஆலயங்கள் உள்ள பகுதிகளில் இருந்தே பிடிக்கவேண்டும் இந்த வகை குரங்குகளிற்கு மனிதர்கள் போல அந்த பகுதிகளில் வாழ்வதற்கான உரிமையுள்ளது எனவும் ஹேமந்த விதானகே தெரிவித்துள்ளார்.

இந்த வழிபாட்டுத்தலங்கள் உள்ள பகுதிகளில் இருந்து குரங்குகளை சீன ஆய்வுகூடங்களிற்கு அனுப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் இந்த முடிவை கைவிடுவார் என கருதுகின்றோம்,அமைச்சரால் தான் நினைத்தபடி விலங்குகளை வேறு நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய முடியாது,ஆனால் வனவிலங்கு திணைக்களத்தின் பணிப்பாளர் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments