பாதுகாப்பு சம்பவம் தொடர்பில் மூடப்பட்ட இந்திய விசா விண்ணப்ப நிலையம் நாளை திங்கட்கிழமை (20.02.23) முதல் மீண்டும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.
திங்கட்கிழமை முதல் விசாவிண்ணப்ப நிலையம் விசா மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பிலான தனது நடவடிக்கைளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே விசா விண்ணப்பங்கள் தொடர்பில் முன்கூட்டிய அனுமதிகளை பெற்றுக்கொண்டவர்கள் புதிய திகதிகளுக்காக ஐவிஎஸ் நிறுவனத்தை தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
விசா மற்றும் தூதரக விடயங்கள் தொடர்பில் அவசர தேவைகள் இருப்பவர்கள் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தை தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.