மின் கட்டண அதிகரிப்பு பாதாள உலக செயற்பாடுகளுக்கு நிகரான நடவடிக்கை – மின்சாரசபை பொறியியலாளர்களின் சங்கம்
மின் உற்பத்திக்கான செலவை குறைப்பதற்கு சந்தர்ப்பம் இருக்கின்ற நிலையில் மின்சார கட்டணத்தை அதிகரிக்க எடுத்த தீர்மானத்திற்கு இனங்கமுடியாது.இது பாதாள உலக செயற்பாடுகளுக்கு நிகரான நடவடிக்கையாகும் என மின்சாரசபை பொறியியலாளர்களின் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்தார்.
அதிகரிக்கப்பட்டிருக்கும் மின்சார கட்டணத்துக்கு இனங்க முடியாது. மின் உற்பத்தி செலவை காரணம் காட்டியே மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் மின்சார உற்பத்தி செலவை குறைப்பதற்கு சந்தர்ப்பங்கள் இருந்தும் அதனை செய்யாமல், அதிக உற்பத்தி செலவில் மின் உற்பத்தி செய்வதாலே கட்டணம் அதிகரிக்கவேண்டி ஏற்பட்டிருக்கிறது
அதனால் இந்த மின் கட்டண அதிகரிப்பில் எந்த நியாயமும் இல்லை. இதற்கு நாங்கள் இனங்கப்போவதில்லை. இதுதொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வது தொடர்பில் கலந்துரையாடி வருகிறோம் என்றார்.