ColourMedia
WhatsApp Channel
Homeமுகப்புகால்பந்து உலகில் பீலே ஏன் அரசன்? 

கால்பந்து உலகில் பீலே ஏன் அரசன்? 

0Shares

1958 ஆம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பைத் தொடர் ஸ்வீடன் நாட்டில் நடைபெற்றது. இதில் வேல்ஸ் அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில், பிரேசில் அணிக்காக விளையாடி உலகக்கோப்பையில் தனது முதல் கோலை பதிவு செய்தார். அப்போது பீலேவுக்கு வயது 17 ஆண்டுகள் 239 நாட்கள் மட்டுமே. உலகக் கோப்பை வரலாற்றில் இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை பீலே படைத்தார்.

பீலே, உலகக்கோப்பை போட்டிகளில் 10 கோல் அசிஸ்ட்களை (assist) செய்துள்ளார். இது இன்று வரை யாராலும் முறியடிக்கப்படாத சாதனையாகும். இதில் குறிப்பாக, 1958 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி போட்டியில் 1 அசிஸ்ட் மற்றும் 1970 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி போட்டியில் 2 அசிஸ்ட்களையும் செய்துள்ளார். உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் அதிக அசிஸ்ட்களை (3) செய்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

1958, 1962, 1970 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற FIFA உலக கோப்பையில் பிரேசில் அணி, சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த மூன்று உலகக் கோப்பை தொடரிலும் பிரேசில் அணிக்காக பீலே விளையாடினார். மூன்று முறை உலக கோப்பையை வென்ற ஒரே வீரர் என்ற பெருமையும் பீலேவுக்கு கிடைத்தது. வேறு எந்த வீரரும் மூன்று முறை உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்தது கிடையாது.

இவ்வாறு கால்பந்தாட்டத்தில் பல சாதனைகளை படைத்த பிரேசில் ஜாம்பவான் பீலே, ‘கருப்பு முத்து’ (The black pearl) என்று அழைக்கப்படுகிறார். 82 வயதான பீலே, உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments